மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாளை தமிழக எம்பிக்களும், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.