இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேட்டியளித்துள்ளார். நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த நாகேஸ்வரன், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும். நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.