தமிழக மருந்து கடைகளில் இனி சானிடைசர் மாதிரியான ஆல்கஹால் கொண்ட பொருட்களை வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் பூதகரமாகி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மருந்து கடைகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.