முன்னணி வங்கியான HDFC NEFT சேவைகள், இன்று இரவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.45 மணி வரை NEFT மூலம் பணம் அனுப்ப முடியாது என, வாடிக்கையாளர்களுக்கு HDFC குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. இதனிடையே UPI, IMPS, RTGS சேவைகள் தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.