மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த 15ஆம் தேதி அஜர்பைஜான் சென்ற நிலையில், தற்போது அஜித் புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அஜித் கிளம்பி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.