இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்க பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சரித் அசலங்கா இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து, இலங்கை அணியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.