எமிஸ் இணையதளம் மூலமாக இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பஸ் பாஸ் வழங்குகிறது. நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட 20 நாட்கள் ஆன நிலையில் 2024-25 கல்வியாண்டுக்கான இலவச பஸ் பாஸ் தேவைப்படும் மாணவர்கள் எமிஸ் இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.