ஆர். கண்ணன் இயக்கும் ‘இவன் தந்திரன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா வெளியிட்டுள்ளார். முதல் பாகம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் வெளிவர உள்ளது. இதில், சரண் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சமுத்திரகனி, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். படம் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.