இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என #DoltForDravid வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இவருக்காக இதை செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு செயலை செய்வது என்னுடைய நம்பிக்கை, தன்மைக்கு எதிரானது என ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.