காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது x பக்கத்தில், “இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்பு & வன்முறையில் நம்பிக்கையில்லாத உலக அரசுகளுக்கும், இஸ்ரேலிய குடிமக்களுக்கும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.