டி20 உலகக் கோப்பையை வென்றபின் இந்திய அணியின் பயிற்சியாளர் அணியிடம் பேசிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், இந்த அணியைக் கண்டு பெருமை கொள்வதாக அவர் உருக்கமாக பேசினார். நான் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவரும் பெருமையாக உணர்கிறார்கள் என்றும் இந்த தருணத்தை வாழ்நாள் வரை மறக்க மாட்டேன் என்றும் டிராவிட் பேசியது வீரர்களை உற்சாகப்படுத்தியது.