சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டார். இதை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்ற நிலையில், குடியரசுத் தலைவர் அவரை நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதியாக கோட்டீஸ்வர் சிங்கும் (முன்னாள் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ) பதவியேற்றார்.