மத்திய பட்ஜெட்டில் பிஹார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நிதியினை ஒதுக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், இந்த 2 கட்சிகளின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.