உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயணத் தொகை, மாணவிகளுக்காக அகல் விளக்கு திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.