உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. மேலும், 28 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்