ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியல் 2024 இன் படி 102 வயதான ஜார்ஜ் ஜோசப் தற்போது உலகின் மிக வயதான பில்லியனர் ஆவார். லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட மெர்குரி ஜெனரல் கார்ப்பரேஷன் என்ற காப்பீட்டு நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபராவார். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் $4.6 பில்லியன் என கூறப்படுகிறது. அவர் 1962-ல் $2 மில்லியன் ஆரம்ப மூலதனத்துடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். தற்போது உலகின் மிக வயதான கோடீஸ்வரராக இருக்கும் அவரது சொத்து மதிப்பு $1.7 பில்லியன் என கூறப்படுகிறது.