நம் நாட்டு உணவுகளில் சாப்பிடும் உணவின் ருசியை அதிகரிக்கவும், உடலுக்கு சக்தியை தருவதற்கும் பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அப்படி நம் சமையலில் அதிகம் உபயோகப்படுத்துதப்படும் ஒரு பருப்பு வகை தான் “உளுந்து”. இந்த உளுந்து பருப்பை, “உளுந்து களி” ஆக்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்
உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. சீத பேதி எனப்படும் மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
சிறுநீரகம்
சிறுநீரகங்களில் கழிவு உப்புகள் தங்கி கற்களாக உருமாறுவது உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். வாரமொருமுறை உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்
நரம்பு கோளாறுகள்
உடலின் சரியான இயக்கம் மற்றும் செயல் பாட்டிற்கு நரம்புகளின் செயல் இன்றியமையாதது. நரம்பு தளர்ச்சி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, ஞாபக மறதி போன்ற நரம்புகள் தொடர்புகொண்ட வியாதிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை உணவின் போது உளுந்து களி சாப்பிடுவதால் மேற்கூறிய வியாதிகள், பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்
தசை பலம்
உடலின் வலிமைக்கு காரணமாக இருப்பது தசைகள் தான். கடினமாக காரியங்கள் செய்வதற்கு உடலில் தசைஅடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும். உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்து களியை அவசியம் சாப்பிட வேண்டும்
கர்ப்ப கால உணவு
கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்