உ.பியில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்குச் சென்ற ராகுல் காந்தி, அவரது குடும்பம் மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த ராகுல் திடீரென தனது கடைக்கு வந்ததை நம்ப முடியவில்லை எனவும், அரை மணி நேரம் தனது பிரச்னைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் ராம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் முடிந்த உதவியை செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.