இந்திரா காந்தி எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தாலும், அவர்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை என பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலம் குறித்து நினைவு கூர்ந்த அவர், இந்திரா காந்தி தங்களை சிறையில் அடைத்தாலும், அவரது அமைச்சர்கள் தங்களை தேச விரோதிகள் என அழைக்கவில்லை என்றார். எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்துவிட கூடாது எனவும் அவர் பாஜகவை சாடினார்.