‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை கூற அமித் ஷாவுக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை என என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். குஜராத்தில் இருந்து நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட அமித் ஷா, அடுத்தவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமித் ஷா போன்றவர்கள் நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்வதை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார்