‘கல்கி 2898 AD’ படத்தில் தான் நடித்திருக்கும் பைரவா கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஷேட் இருக்கும் என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், முதன்முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது எனது சினிமா கேரியரில் சிறந்த படமாக இருக்கும். அமிதாப், கமல் போன்ற ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்ததை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.