முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரிய நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற நிலையில், விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரி இருந்தார். இந்த மனு மீதான விசாரணையை 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.