வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி தங்களுக்கு கணக்கு உள்ள ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம். மற்ற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் 3 முறையும், பிற பகுதியில் வாடிக்கையாளர்கள் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ₹21 கட்டணம் வசூலிக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.