இருப்புப்பாதை அமைத்த பிறகு ரயிலை இயக்கும்படி, ரயில்வே அமைச்சகத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரயில்வே துறையில் என்னென்ன திட்டங்களுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற முழு விபரங்கள் அடங்கிய பிங்க் புக் ( Pink book ) இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்றே இரயில்வே அமைச்சர் துவங்கி அனைத்து மண்டல பொது மேலாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து பிரச்சாரத்தை துவக்கிவிட்டனர். ஏன் இந்த பதட்டம்? தண்டவாளத்தை போட்ட பின் இரயிலை இயக்குங்கள் அய்யா என கேள்வி எழுப்பியுள்ளார்.