சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவியாகவே இசையை கருதுவதாக பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார். மக்கள் இசைக் கலைஞர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் தனி இசை மீது தனக்கு பற்று ஏற்பட்டதாகக் கூறிய அவர், அந்த இசையையே நவீன வடிவில் ‘வள்ளியம்மா பேராண்டி’ என்ற 12 பாடல்கள் கொண்ட புதிய இசை ஆல்பமாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.