இந்திய கப்பற்படையின் முக்கியமான போர்க்கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான போராட்டத்திற்குப்பின் இன்று காலை தீ அணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் ஏப்ரல் 2000 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.