ஜூலை 1 நாளை முதல் பல்வேறு துறைகளில் பணம் சார்ந்த விஷயங்களில் மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றை ஐசிஐசிஐ வங்கி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. அதில் அனைத்து கார்டுகளிலும் கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.