2023-24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதனால் உடனே கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் நாளை முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.