இந்தியாவில் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. அதில், அவர்களின் ஐபோன்கள் (இஸ்ரேலின்) பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஹபூபா முப்தியின் மகள் இதிஜா முப்தி உள்ளிட்ட 2 பேர், இத்தகைய எச்சரிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2023லிலும் ஆப்பிள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.