ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டு அதன்மூலம் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை ஏமாற்றுகிற பட்ஜெட், விளிம்புநிலை மக்களுக்கு எதிரான பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.