தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தொடர் தோல்வியடைந்த பிறகும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அவர்களுக்கு மனமில்லை, நல்ல குணமில்லை என்று தெரிவித்துள்ளார்.