அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும் என ஹத்ராஸ் விபத்தை குறிப்பிட்டு போலே பாபா தெரிவித்துள்ளார். இந்த இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார். இந்த விபத்தில் 121 பேர் பலியான நிலையில், இதுவரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போலே பாபா பெயர் FIR இல் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.