கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததை தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி, அவரது சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட வரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை தான் ஒரு சொட்டு கூட சாராயம் குடித்ததில்லை எனவும், தனது தம்பி தாமோதரன் தான் டெஸ்ட் செய்து சொல்வார் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.