விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். இந்தி திரை உலகின் உச்ச நட்சத்திரங்கள் படப்பிடிப்பின் போது அவர்களுக்கென தனியாக சமையல் கலைஞர்களை வைத்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க சொல்வதாகவும் இவர் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யும் உணவுகளில் கோழிகளுக்கு தீனி இடுவது போல சிறிதளவு உணவுகளை மட்டுமே சமைக்க சொல்லும் நிலையில் டாக்டர்கள் அறிவுறுத்துவதாகவும் கூறுகின்றனர். ஆனால் தன்னுடைய படங்களில் இது போன்ற விஷயங்களை தான் அனுமதிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.