சென்னை சூளைமேட்டில் பணத்தை 100 நாள்களில் இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு 100 நாள்களில் ரூ.2 லட்சமாக திருப்பிக் கொடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றனர். பின்னர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.