சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை சேர்க்கலாம் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்த நிலையில் எடப்பாடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் 2026 இல் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.