முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுவின் தந்தை செல்லையா (98) இன்று பிற்பகல் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற உள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.