புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்திய 7 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே தீவிரப்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.