அதிக மானியம் பெறுவதற்காக அரசு உதவிபெறும் பள்ளிகள் போலியாக பல மாணவர்களின் பெயரை இணைத்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. பெற்றோர்களின் மொபைல் எண்களை உறுதிப்படுத்த எமிஸ் இணையதளம் மூலம் OTP அனுப்பப்பட்டு வருகிறது. இதில் 4, 5 மாணவர்களுக்கு ஒரே எண் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் உள்ள போலியான மாணவர்களின் விவரங்களை நீக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.