ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை ராணுவம் தேடி வரும் நிலையில், இதற்கு காஷ்மீர் டைகர் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் கிளையாக அது கருதப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 26 பேரிடம் விசாரிக்கப்படுகிறது