கமல், தனுஷ், சிம்பு, விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த 4 நடிகர்களின் படங்களுக்கும் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.