இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிகாலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து புதியவரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த கம்பீரின் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ், கம்பீர் பயிற்சியாளரானால் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.