காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தின் இந்த முடிவை எதிர்த்து சட்ட ரீதியான போராட்டம் நடத்தி, தமிழகத்துக்கான நீதியை பெற திமுக அரசு அக்கறை காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.