கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை உறுதி செய்துள்ள படக்குழு இதுகுறித்தான அப்டேட்டும் கொடுத்துள்ளது. அதன்படி, கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பு முடித்த பிறகே அந்த அப்டேட் கொடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.