கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மரணம் அடைந்த கந்தன் என்பவர் இறப்பதற்கு முன்பு உயிருக்கு போராடியவாறு பேசியிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தான் ஒரு பாக்கெட் மட்டுமே சாராயம் குடித்ததாகவும், தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று அவர் கண்ணீருடன் கூறுகிறார். இந்த வீடியோவில் பேசிய கந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.