கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.