கள்ளக்குறிச்சி மாவட்டம் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்த இறுதி விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் அறிக்கை அடிப்படையில் வாதங்களை முன்வைக்க இருப்பதாக அதிமுக மற்றும் பாமக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.