தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்களை வணங்கியுள்ளது. ஆல்கஹாலின் மூலப் பொருட்களாக இருக்கும் மருந்து பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்டவை மூலப் பொருட்களாக இருக்கும் மருந்துகளை முறைப்படி விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பிரிட், சானிடைசர், ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவற்றை முறைப்படி விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் எதிரொலியின் காரணமாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குவோரிடம் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விதி மீறி தனி நபர்களுக்கு அதிக அளவு சானிடைசர் விற்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.