கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த கள்ளச்சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கண்ணன் என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.