கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனித உயிர்களைக் காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இந்த சம்பவத்தை பாடமாக எடுத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.